Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
கொள்ளு குழம்பு
கொள்ளு சாப்பிட்டால், உடல் வலிமை பெறும் என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அதற்கு அதனை அவர்கள் சரியான முறையில் சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். கொள்ளுவை விரும்பி சாப்பிட வேண்டுமெனில், அதனை குழம்பு செய்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில் கொள்ளு குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது கொள்ளு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சின்ன கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிது
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள கொள்ளை சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்து அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து அரைத்து, சாதத்துடன் பரிமாறினால், சுவையான கொள்ளு குழம்பு ரெடி!!!
Image Courtesy: Kuganskitchen



Click it and Unblock the Notifications
