Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
பசலைக்கீரை தேப்ளா
தேப்ளா என்பது ஒரு குஜராத்தி ஸ்டைல் ரெசிபி. இது சப்பாத்தி போன்றது தான். ஆனால் இது மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரை தேப்ளாவை காலை வேளையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த ரெசிபியானது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஏற்றது.
அதுமட்டுமல்லாமல், இந்த ரெசிபியின் மூலம் கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளை, இதன் மூலம் கீரை சாப்பிட வைக்கலாம். சரி, இப்போது அந்த பசலைக்கீரை தேப்ளாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பசலைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பசலைக் கீரை, சீரகம், ஓமம், தயிர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை 10 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
அடுத்து அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள தேப்ளாவை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை தேப்ளா ரெடி!



Click it and Unblock the Notifications
