Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்
முளைக்கட்டிய பச்சைப்பயறு மசாலா
திங்கட்கிழமை வந்தாலே அனைவருக்கும் ஒருவித கடுப்பு ஏற்படும். அதிலும் காலையில் எழுந்து சமைத்துக் கொண்டு, அலுவலகத்திற்கு செல்வது என்பது சற்று தொல்லை பிடித்த வேலையாக இருக்கும். அதனால் பலர் காலையில் சரியாக சாப்பிடாமல் கூட செல்வார்கள். ஆனால் கஷ்டப்படாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், ஞாயிற்று கிழமை அன்று மதியம் பச்சை பயறை நீரில் நன்கு ஊற வைத்துவிட்டு, இரவில் படுக்கும் போது அதனை ஒரு துணியால் கட்டிவிட்டு தூங்கினால், மறுநாள் காலையில் எழுந்து அருமையான ரெசிபி ஒன்றை செய்யலாம்.
அது தான் முளைக்கட்டிய பச்சைப்பயறு மசாலா. இதனை காலையில் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு தேவையான சக்தியானது கிடைக்கும். சரி, இப்போது அந்த முளைக்கட்டிய பச்சைப்பயறு மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
ப்ளாக் உப்பு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முளைக்கட்டிய பச்சைப்பயறை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின், உப்பு, ப்ளாக் உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி, நீண்ட நேரம் ஊற வைக்காமல் உடனே சாப்பிட வேண்டும்.
இப்போது சூப்பரான மற்றும் ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சைப்பயறு மசாலா!!!
குறிப்பு:
தற்போது முளைக்கட்டிய பச்சைப்பயறு கடைகளில் விற்கப்படுகிறது. அதைக்கூட வாங்கி பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
