Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
கொஜ்ஜூ அவலக்கி
காலையில் ஏதேனும் சுவையான ருசியில் ஒரு வெரைட்டி ரைஸ் செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு ரெசிபியான கெஜ்ஜூ அவலக்கி சிறந்ததாக இருக்கும். இந்த ரெசிபி அவலை வைத்து எளிதில் செய்யப்படும் வகையில் இருக்கும்.
இப்போது அந்த கொஜ்ஜூ அவலக்கியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

அவல் - 1 பெரிய கப்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/2 கப்
பெருங்காயத் தூள் - 1 பெரிய சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அவலை லேசாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். (பொடி செய்துவிட வேண்டாம்.)
பின் அதனை நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அவலைப் போட்டு, அதில் புளித் தண்ணீர், வெல்லத் தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, 7 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
அடுத்து, அதில் வேர்க்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பிறகு அதில் அந்த அவலைப் போட்டு, அதில் உள்ள நீர் சுண்டும் வரை, அடுப்பில் வைத்து, இறுதியில் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான அவலக்கி ரெடி!!!



Click it and Unblock the Notifications