Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பூண்டு புளி குழம்பு

தேவையான பொருட்கள் :
பூண்டு - 100 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2 (பெரியது)
வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப் (சற்று கெட்டியானது)
புளி - 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 50 கிராம்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பூண்டை நன்கு சுத்தமாக தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள போட்டு தாளிக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.
பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து, குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். பின் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கிக் கொள்ளவும்.
இப்போது சுவையான பூண்டு புளி குழம்பு தயார்!!!



Click it and Unblock the Notifications
