Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
சிம்பிளான... தக்காளி சாம்பார்
விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு/துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப் + தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்-1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதோடு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
பின்பு புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி!!!



Click it and Unblock the Notifications
