சேமியா பொங்கல்

Posted By:
Subscribe to Boldsky
Semiya Pongal
சனிக்கிழமை அன்று அனைவருக்கும் பொதுவாக விடுமுறையாக இருக்கும். அப்போது சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு ரெசிபியை ட்ரை செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும் அல்லவா? அப்படியெனில் அதற்கு சேமியா பொங்கல் சரியாக இருக்கும். அந்த சேமியா பொங்கலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்

பயத்தம் பருப்பு - 2 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

இஞ்சி - சிறிது (துருவியது)

முந்திரிப் பருப்பு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத்தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பயத்தம் பருப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.

பிறகு அதோடு வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்கவும்.

பின் அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

அதே நேரத்தில் மற்றொரு பக்கம் மற்றொரு வாணலியை வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்த சேமியாவில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்க வேண்டும்.

இப்போது அருமையான சேமியா பொங்கல் ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

English summary

Delicious Semiya Pongal | சேமியா பொங்கல்

Make Delicious Semiya Pongal using this simple recipe from awesome cuisine.
Subscribe Newsletter