Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உருளைக்கிழங்கு குருமா

இப்போது அந்த உருளைக்கிழங்கை வைத்து எப்படி ஈஸியாக குருமா செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
கசகசா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு மசித்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!! இதனை சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
