Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
பருப்பு சுக்கா
பருப்பு வகைகளில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அத்தகைய பருப்புக்களை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியவசிய சத்துக்கள் கிடைக்கும். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாவதைத் தடுக்கலாம். அதிலும் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் பருப்புக்களை சமைப்பதை விட, சற்று வித்தியாசமாக செய்து பார்க்கலாம்.
இப்போது அந்த பருப்பு கொண்டு செய்யப்படும் சுக்காவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - 1
செய்முறை:
முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை போட்டு வதக்கி, நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி, இத்துடன் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பிறகு அந்த கலவையை குக்கரில் ஊற்றி, அந்த குக்கரை அடுப்பில் வைத்து மூடி, 2-3 விசில் விட்டு இறக்கி, விசிலானது போனதும் குக்கரை திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதன் மேல், சிறிது சீரகத்தை வறுத்து பொடி செய்து தூவி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, சூடாக சாதத்துடன் பரிமாறினால், அருமையான தால் சுக்கா ரெடி!!!



Click it and Unblock the Notifications
