காலிஃப்ளவர் வறுவல்

Posted By:
Subscribe to Boldsky
Cauliflower Roast
வீட்டில் மதிய வேளையில் சமைத்து சாப்பிடும் போது, எப்போதும் சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது சில்லி போன்று காலிஃப்ளவரை வறுவல் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மேலும் இந்த டிஷ்ஷை மாலை வேளையில் கூட ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த காலிஃப்ளவர் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

கடலை மாவு - 1/2 கப்

மைதா மாவு - 1/4 கப்

கார்ன் ப்ளார் - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா மாவு, கார்ன் ப்ளார் மற்றும் அரிசி மாவை போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பின் காலிப்ளவரை சிறிதாக நறுக்கி, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அலசி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள மாவை தூவி, இஞ்சி பூண்டு விழுது, அஜினோமோட்டோ, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கேசரி பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர்த சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, காய வைத்து, அதில் அந்த காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான காலிஃபள்வர் வறுவல் ரெடி!!!

English summary

cauliflower roast | காலிஃப்ளவர் வறுவல்

Make delicious cauliflower roast using this simple recipe from awesome cuisine.
Story first published: Thursday, September 20, 2012, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter