Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
காலிஃப்ளவர் மசாலா
இரவில் சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான மசாலாவை செய்யாமல், அவ்வப்போது வெரைட்டியாக செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக காலிஃப்ளவர் மசாலா சப்பாத்திக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும். அதுமட்டுமின்றி, இது நிறைய சத்துக்கள் நிறைந்த காய்கறியும் கூட.
உங்களுக்கு மிகவும் எளிமையாக காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மில்க் + க்ரீம் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு 3-5 நிமிடம் வதக்கி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் பால் மற்றும் க்ரீம் சேர்த்து சிறிது நேரம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் அதில் காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வேக வைத்து, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காலிஃப்ளவர் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
