Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
கேரட் பீன்ஸ் சாதம்
மழைக்காலத்தில் காலை வேளையில் சீக்கிரம் எழுவது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் மற்ற காலங்களை விட, மழைக்காலத்தில் வானிலையானது இதமாக இருப்பதால், படுக்கையில் இருந்து எழுவதே சிரமமான ஒன்றாக உள்ளது. அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு அல்லது வேலைக்கு செல்வோருக்கு, காலை வேளையில் சமைத்துக் கொடுக்க தாமதமாக எழுந்துவிட்டால், அப்போது எளிதில் செய்யக்கூடிய வகையில் கேரட் பீன்ஸ் சாதம் ரெசிபி சரியானதாக இருக்கும்.
மேலும் இந்த ரெசிபி மதிய வேளையிலும் சாப்பிடக்கூடியவாறு அருமையான சுவையில் இருக்கும். இப்போது அந்த கேரட் பீன்ஸ் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சாதம் - 2-3 கப்
கேரட் - 4-5 (நீளமாக மற்றும் மெல்லியதாக சீவியது)
பீன்ஸ் - 8-10 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புலாவ் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் மூடி வைத்து காயை வேக வைக்க வேண்டும்.
அடுத்து மிளகு தூள், மிளகாய் தூள், புலாவ் மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் சாதத்தைப் போட்டு நன்கு பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கேரட் பீன்ஸ் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
