Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
குடைமிளகாய் பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது)
குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பின் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை போட்டு, ஒரு 3 நிமிடம் கிளறி இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் பன்னீர் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
