Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
சோள புட்டு
மாலை வேளையில் பசிக்கும் போது, வடை, பஜ்ஜி என்று மட்டும் செய்து சாப்பிடாமல், ஆரோக்கியமாக புட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் எப்போதும் போல ஒரே மாதிரியாக அரிசி மாவை கொண்டு மட்டும் புட்டு செய்யாமல், ராகி, சோளம் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்து சுவையுங்கள்.
இங்கு சோளம் கொண்டு எப்படி புட்டு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சோள ரவை - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
முதலில் சோள ரவையை வாங்கி அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் அதனைப் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து, அத்துடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இட்லி தட்டில் ஈரத் துணியை விரித்து, அதில் புட்டு மாவை தூவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதித்ததும், மூடியைத் திறந்து, அதில் இட்லி தட்டை வைத்து மீண்டும் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கி, அதன் மேல் துருவிய தேங்காயை போட்டு பிரட்டி பரிமாறினால், சோள புட்டு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications