Latest Updates
-
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கத்திரிக்காய் தக்காளி சப்ஜி
வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு காய்கறி தான் கத்திரிக்காய். இந்த கத்திரிக்காய் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், அதனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவார்கள். உங்களுக்கு கத்திரிக்காய் மிகவும் பிடிக்குமானால், அதனை தக்காளியுடன் சேர்த்து சப்ஜி போன்று செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
இங்கு கத்திரிக்காய் தக்காளி சப்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 4-5 பற்கள்
தக்காளி - 4 (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி இலை - 1
பட்டை - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை வெட்டி, நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளி, கத்திரிக்காய், தண்ணீர், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறி, மூடி வைத்து 8-10 நிமிடம் நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
இறுதியில் மூடியைத் திறந்து, நன்கு சப்ஜி போன்று மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கி இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறினால், கத்திரிக்காய் தக்காளி சப்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications
