Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
கடலை மாவு பூரி
பொதுவாக கடலை மாவு கொண்டு பஜ்ஜி, போண்டா என்று தான் செய்வோம். ஆனால் கடலை மாவைக் கொண்டு பூரி செய்யலாம் என்பது தெரியுமா? அதிலும் இந்த மாவைக் கொண்டு செய்யும் பூரியானது மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் இது விரைவில் செரிமானமாகக்கூடியது.
மேலும், இது காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற ஒரு காலை உணவு. சரி, இப்போது அந்த கடலை மாவு பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கப்
மைதா - 1 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் 4-5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கடலை மாவு பூரி ரெடி!!!



Click it and Unblock the Notifications