Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Andhra Garlic Chicken Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் விடுமுறை நாட்களில் பெரும்பாலும் சிக்கனை தான் செய்வீர்களா? எப்பவும் சிக்கன் வாங்கினால், அதைக் கொண்டு ஒரே சுவையில் குழம்பு, கிரேவி, தொக்கு, 65, வறுவல் என்று தான் செய்வீர்களா? அதுவும் சிக்கன் வறுவலை அடிக்கடி செய்வீர்களானால், ஒருமுறை கார்லிக் சிக்கன் வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் ஆந்திராவில் பிரபலமானது. மதிய வேளையில் ரசம் வைத்து, இந்த வறுவலை செய்தால் போதும், சுவை அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த ஆந்திரா கார்லிக் சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஆந்திரா கார்லிக் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா கார்லிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (மெல்லியதாக நறுக்கியது)
* ஊற வைத்த சிக்கன்
* பச்சை மிளகாய் - 8 (கீறியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 20 (தோல் நீக்கி தட்டியது)
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பச்சை மிளகாயை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான
தீயில் வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கனில் உள்ள நீர் ஓரளவு வற்றும் வரை
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு 10
நிமிடம் வதக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து ப்ரையானதும், கறிவேப்பிலையை சேர்த்து 1
நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான ஆந்திரா கார்லிக் சிக்கன்
தயார்.



Click it and Unblock the Notifications