Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
பேச்சுலர்களுக்கான... பீட்ரூட் பொரியல்
வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி.
இங்கு பீட்ரூட் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த பொரியல் பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை சுத்தமாக நீரில் கழுவி, தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு குக்கரில் போட்டு, பீட்ரூட் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
