Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி
பானங்களில் நிறைய உள்ளன. அவற்றில் மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் பலரும் மில்க் ஷேக்கை மட்டும் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவர். ஆனால் உண்மையில் மில்க் ஷேக்கை விட, ஸ்மூத்தி மிகவும் சுவையுடன் இருக்கும். சொல்லப்போனால், ஒருவிதத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக செய்வது போல் தான் இருக்கும். பொதுவாக ஸ்மூத்தி ஒரு ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானம்.
இப்போது அவற்றில் ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை வைத்து எப்படி ஸ்மூத்தி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 1-2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
வாழைப்பழம் - 2
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ப்ளெண்டரில், ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து, நன்கு மென்மையாக க்ரீம் போன்று வரும் வரை அடித்து, குளிர்ச்சியுடன் வேண்டுமெனில், ஐஸ் கட்டிகளைப் போட்டு ஒருமுறை அடித்து, பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!! இது மாலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற ஒரு பானம்.



Click it and Unblock the Notifications
