Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா
மாலை வேளையில் டீ அல்லது காபியுடன், நன்கு சூடாக எதையேனும் சாப்பிட்டால், நன்றாக இருக்கும். அதிலும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கோப்தா சற்று வித்தியாசமான ஒரு ஸ்நாக்ஸாக இருக்கும். மேலும் கோப்தாவில் பல வெரைட்டிகள் உள்ளன.
இப்போது அவற்றில் ஒன்றான உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து, மசித்தது)
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
