Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பச்சைப் பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 1/4 கிலோ
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலு மட்டர் செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக் நறுக்கி வேகவைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயையும் நெய்யையும் கலந்து, காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிய விடவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக குழைய வதக்கவும்.
இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை போட்டு கிளறவும், பின்னர் பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கிரோவி பதம் வந்த உடன் மல்லித்தழை போட்டு இறக்கவும். சுவையான ஆலு மட்டர் மசாலா தயார். சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.



Click it and Unblock the Notifications