Latest Updates
-
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல்
இன்று உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஓர் வித்தியாசமான சுவையைக் கொண்ட உருளைக்கிழங்கு ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் உருளைக்கிழங்கை தேங்காய் பால் சேர்த்து வறுவல் செய்வது. இதன் ருசி நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தட்டு கொண்டு மூடி வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் தேங்காய் பால் ஊற்றி, தீயை அதிகரித்து, நீர் வற்றும் வரை நன்கு பிரட்டி விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
