Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
முட்டைக்கோஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த நாவூறும் மஞ்சூரியனை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Veg Manchurian Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வாய்க்கு ருசியான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் ரெஸ்டாரண்ட்டுகளில் விற்கப்படும் சுவையான மஞ்சூரியனை செய்யுங்கள்.
இந்த முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். மழை பெய்யும் போது இப்படியான மஞ்சூரியனை செய்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1/2 கிலோ
* மைதா - 1/2 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
வதக்குவதற்கு...
* சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
* சிறிய குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய
முட்டைக்கோஸ், மைதா, சோள மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி
பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,
கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை
ஊற்றி கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா மற்றும் 1/2 கப் நீரை
ஊற்றி கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், க்ரீன் சில்லி சாஸ்
மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் சோள மாவு நீரை ஊற்றி 1 நிமிடம் தொடர்ந்து கிளறி விட
வேண்டும். கெட்டியாகத் தொடங்கியதும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள
முட்டைக்கோஸ் உருண்டைகளை சேர்த்து, 2 நிமிடம் கிளறி இறக்கினால்,
சுவையான வெஜ் மஞ்சூரியன் தயார்.



Click it and Unblock the Notifications










