Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த வெஜ் லாலிபாப் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சிக்கனை விட சூப்பரா இருக்கும்!
Veg Lollipop Recipe in Tamil: குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் புதிய தின்பண்டங்களுக்கான தேவைகள் இருக்கும். மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு காபி, டீயுடன் மொறுமொறுவென்று ஏதாவது செய்து கொடுத்தால், அவர்களின் வயிறு நிறைவதோடு, அவர்கள் மகிழ்ச்சியும் அடைவார்கள். ஆனால் எப்போதும் போல பஜ்ஜி, போண்டாக்கு பதில் புதிதாக ஸ்னாக்ஸ் செய்வது கூடுதல் திருப்தியைக் கொடுக்கும்.
பொதுவாக குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் காய்கறிகள் அவர்கள் விரும்பும் சுவையில் இருக்காது. எனவே காய்கறிகளை குழந்தைகளுக்கு பிடித்த நொறுக்குத் தீனிகளுடன் சேர்த்து செய்து கொடுப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றது. அப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உதவும் நொறுக்கு தீனிதான் வெஜ் லாலிபாப். இந்த சூப்பரான வெஜ் லாலிபாப்பை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 4
- துருவிய கேரட் - 1
- நறுக்கிய குடைமிளகாய் - 1/2
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- துருவிய பன்னீர் - 250 கிராம்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
- பிரட் - 2
- உப்பு - தேவையான அளவு
லாலிபாப் மேல் மசாலாவுக்கு:
- சோள மாவு - 1 டீஸ்பூன்
- மைதா மாவு - 1 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- மிளகுத்தூள் - 1 சிட்டிகை
- தண்ணீர் - தேவையான அளவு
- பிரட் தூள் - 2 கப்
- குச்சிகள் - 5
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
- மசித்த உருளைகிழங்கில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பிறகு துருவிய பன்னீர், மிளகாய்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் பச்சை மிளகாய் மற்றும் பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்து வைத்துள்ள லாலிபாப் கலவையை குச்சிகளில் சிக்கன் போன்ற வடிவில் செட் செய்து கொள்ள வேண்டும்.
- ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, மிளகுதூள், உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின் செய்து வைத்துள்ள வெஜ் லாலிபாப் மேல் ஸ்பூனால் எடுத்து அனைத்து பக்கமும் படும் படி ஊற்ற வேண்டும்.
- பின்னர் ஒரு தட்டில் பிரட் தூளை கொட்டி அதில் வெஜ் லாலி பாப்களை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள லாலி பாப்களை பொரித்து. எடுக்கவும்.
- ஒரு பிளேட்டில் வெஜ் லாலி பாப்களை சூடாக எடுத்து வைத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். சூடான சுவையான மற்றும் ஆரோக்கியமான லாலிபாப் ரெடி.
- இதில் உங்கள் தேவைக்கேற்ப பிற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications