Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி செய்யாம.. ஒருடைம் இந்த குருமாவை செய்யுங்க.. சுவை அள்ளும்..
Veg Kurma For Idly Dosa: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் வெஜ் குருமாவை செய்யுங்கள். அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், மசாலா அரைத்து குக்கரில் அனைத்தையும் போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால் போதும். இந்த குருமா வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 1
* தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 15
* கசகசா - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கல்பாசி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 1
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 3
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* காலிஃப்ளவர் - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி,
பச்சை மிளகாய், தேங்காய், முந்திரி, கசகசா, பட்டை, கல்பாசி ஆகியவற்றை
எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
அதில் அன்னாசிப்பூ, சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்
* பின் அதில் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட
வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும்
குக்கரைத் திறந்தால், சுவையான வெஜ் குருமா தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
