Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
வாழைக்காய் வாங்குனா.. இப்படி வறுவல் செய்யுங்க.. மீன் வறுவலே தோத்துப் போயிடும்...
Vazhakkai Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வாழைக்காய் பிடிக்குமா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் வாழைக்காய் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் வாழைக்காயை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை அந்த வாழைக்காயைக் கொண்டு அருமையான வறுவலை செய்யுங்கள்.
அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாழைக்காயை வறுவல் செய்தால், பின் எப்போதும் இப்படி தான் வாழைக்காயை சமைப்பீர்கள். அந்த அளவில் இந்த வாழைக்காய் வறுவல் ருசியாக இருக்கும். முக்கியமாக இது மீன் வறுவல் தோற்றுப்போகும் அளவில் அட்டகாசமாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 3
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, தட்டையான மெல்லிய
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அவற்றை உப்பு நீரில் போட்டு
அலசி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி உப்பு
நீரில் போடுவதால், வாழைக்காய் நிறம் மாறாமல் வெள்ளையாக இருக்கும்.
* பின்னர் ஒரு அகலமான கிண்ணத்தில் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள்
தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 2 டீஸ்பூன்
சீரகத் தூள், 2 டீஸ்பூன் மல்லித் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும்
1 டீஸ்பூன் உப்பு சேர்த்து மசாலா அனைத்தும் ஒன்று சேர கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 1/2
டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் ரவை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு ஒரு தட்டில் இந்த மசாலாவை எடுத்து பரப்பிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒவ்வொரு வாழைக்காய் துண்டையும் எடுத்து, மசாலாவில் பிரட்டி,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி பரப்பி, பிரட்டி வைத்துள்ள வாழைக்காயை போட்டு, முன்னும்
பின்னும் அழுத்திவிட்டு, ப்ரை செய்து எடுத்தால், சுவையான வாழைக்காய்
வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
