Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் நாவூறும்.. சர்க்கரை பொங்கல் - எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Varalakshmi Vratham Special Sweet Pongal Recipe In Tamil: வரலட்சுமி நோன்பு வரப்போகிறது. பெண்கள் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியின் அருளைப் பெற விரதம் இருந்து, சிறப்பு பூஜைகளை செய்து, பலவிதமான பலகாரங்கள் மற்றும் இனிப்புக்களை செய்து படைத்து, லட்சுமி தேவியை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பானது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் வருகிறது. அதுவும் வரலட்சுமி விரதம் 2025 ஆகஸ்ட் 08 ஆம் தேதி வருகிறது. இந்த வரலட்சுமி நோன்பை மேற்கொள்வதன் மூலம் செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைகள், வெற்றி, புகழ் போன்றவை கிடைக்கும்

பொதுவாக வீட்டில் ஏதேனும் பூஜை செய்தால், இனிப்புக்களை கட்டாயம் செய்வோம். அதுவும் சர்க்கரை பொங்கலை செய்வது இன்னமும் நல்லது. வருகிற வரலட்சுமி நோன்பின் போது, உங்கள் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்வீர்களா? அப்படியானால் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் சர்க்கரை பொங்கல் செய்யுங்கள். இதனால் சுவை இன்னும் சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரை பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொன்னி பச்சரிசி - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* பொடித்த மண்டவெல்லம் - 1 கப்
* வெல்லம் கரைப்பதற்கு தண்ணீர் - 1/4 கப்
* நெய் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 3
* ஜாதிக்காய் - 1 சிட்டிகை
* பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
தாளிப்பதற்கு..
* நெய் - 1/4 கப்
* முந்திரி - தேவையான அளவு
* உலர்திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து, நல்ல மணம் வந்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி,
அத்துடன் பச்சரிசியை சேர்த்து கிளறி, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த அரிசி பருப்பில் 3 கப் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, குக்கரை அடுப்பில் வைத்து குக்கரை மூடி 4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில்
வெல்லத்தை பொடித்து சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி, வெல்லத்தை
கரைய விட வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் 1/2 கப்
நெய்யை ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அந்த குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து, குறைவான தீயில்
வைத்து, அதில் கரைத்த வெல்லத்தை வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்
போதே வடிகட்டி ஊற்றி, அத்துடன் பொடித்த ஏலக்காய், பச்சை கற்பூரம்
மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து தாளித்து, பொங்கலுடன்
சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சர்க்கரை பொங்கல்
தயார்.



Click it and Unblock the Notifications