வரலட்சுமி விரத ஸ்பெஷல்: பன்னீர் பாயாசம்

வரலட்சுமி விரதம் வரப்போகிறது. இந்த வருட வரலட்சுமி நோன்பின் போது உங்கள் வீட்டில் ஸ்பெஷல் பிரசாதம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பாயாசம் செய்யுங்கள்.

Posted By:

வரலட்சுமி விரதம் வரப்போகிறது. இந்த வருட வரலட்சுமி நோன்பின் போது உங்கள் வீட்டில் ஸ்பெஷல் பிரசாதம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பாயாசம் செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீரைக் கொண்டு சைடு டிஷ்களைத் தான் செய்திருப்பீர்கள். ஆனால் பன்னீரைக் கொண்டு பாயாசம் செய்தால், அது வித்தியாசமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். அதோடு வீட்டிற்கு வரலட்சுமி நோன்பின் போது வருபவர்களிடம் பாராட்டையும் பெறலாம்.

Varalakshmi Vratham Special: Paneer Payasam Recipe In Tamil

உங்களுக்கு பன்னீர் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் - 1 லிட்டர் / 4 கப்

* பன்னீர் - 200 கிராம்

* சர்க்கரை - 1/2 கப்

* குங்குமப்பூ - சிறிது

* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

* நறுக்கிய பாதாம், பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பன்னீரைத் துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் பால் பாதியாக குறையும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.

* இப்போது அதில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கிளறி நன்கு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் துருவிய பன்னீரை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* இப்போது பாயாசம் சற்று கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும்.

* அதன் பின் அதில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து இறக்கினால், பன்னீர் பாயாசம் தயார்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Desktop Bottom Promotion