Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..
வல்லாரைக் கீரை துவையல்
வல்லாரைக் கீரையைக் கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம். இதில் வல்லாரைக் கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக மாணவர்கள் வல்லாரைக் கீரையை சாப்பிட்டால், அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால், குழந்தைகளுக்கு வல்லாரைக் கீரையை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால், அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். வல்லாரைக் கீரையைக் கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம். இதில் வல்லாரைக் கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வல்லாரைக் கீரை துவையல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வல்லாரைக் கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
* பூண்டு - 5 பற்கள்
* வரமிளகாய் - 2
* வல்லாரைக் கீரை - 2 கப்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான வல்லாரைக் கீரை துவையல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
