Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
வாழைக்காய் பொடி வறுவல் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சாம்பார் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...!
Valakkai Podi Varuval Recipe in Tamil: வழக்கமாக சாம்பார், ரசம் போன்றவற்றை செய்யும் போது அதற்கு சரியான சைடிஷ் என்ன செய்வது என்பதே மிகப்பெரிய கவலையாக இருக்கும். ஏனெனில் அனைத்து காய்கறிகளும் சாம்பாருக்கு சரியான சைடிஷாக இருக்காது. ஆனால் அனைத்து வகை குழம்புகளுக்கும் சூப்பராக இருக்கும் ஒரு காய்தான் வாழைக்காய்.
வாழைக்காயை பொதுவாக நாம் புளிக்குழம்பு அல்லது பொரியல் செய்வதுதான் வழக்கம், ஆனால் வாழைக்காயை பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் பொரியல் செய்வோம். இது சுவையானதாக இருந்தாலும் எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் புது முறையில் செய்வது சிறப்பானதாக இருக்கும். அப்படி வாழைக்காயை சமைக்கக் கூடிய புதிய முறைதான் வாழைக்காய் பொடி வறுவல்.

இந்த வாழைக்காய் பொடி வறுவல் வழக்கமான வறுவல் போல அல்லாமல் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலின் சிறப்பே அதில் சேர்க்கப்படும் பொடிதான். மேலும் இது காரைக்குடி வட்டாரத்தில் மிகவும் பிரபலமானதாகும். இந்த பதிவில் சுவையான வாழைக்காய் பொடி வறுவலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- வாழைக்காய் - 1
- புளி - நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடி அரைக்க:
- வர மிளகாய் - 2
- வர மல்லி - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து வர மிளகாய், வர மல்லி, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் போட்டு பொன்னிறமாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். புளி நன்கு ஊறிய பிறகு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
- புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வாழைக்காயை இரு துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வாழைக்காயை வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு அதனுடன் வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- இறுதியில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும்.
- இப்போது சுவையான வாழைக்காய் பொடி வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications
