Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Urulaikilangu Paal Kootu Recipe in Tamil: உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். மதிய வேளையில் சாம்பார் அல்லது ரசம் சாதத்துக்கு ஒரு அருமையான சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கை வழக்கமாக செய்வது போன்று வறுவல் செய்து சாப்பிடாமல், ஒருமுறை கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் உருளைக்கிழங்கு பால் கூட்டை செய்து சாப்பிடுங்கள். இந்த உருளைக்கிழங்கு பால் கூட்டு டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். அனைத்து கல்யாண விருந்திலும் இந்த கூட்டு நிச்சயம் இருக்கும், ஏனெனில் இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.

உருளைக்கிழங்குடன் பட்டாணி சேர்த்து செய்யப்படும் இந்த கூட்டு நம் எல்லோருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். இனி இந்த உருளைக்கிழங்கு வறுவலை சாப்பிட கல்யாண வீட்டுக்கு செல்லும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரொம்ப ஈஸியா வீட்டிலேயே செஞ்சு சந்தோஷமா சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு கூட்டு சைடிஷாக மட்டுமின்றி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக் கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பால் கூட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பால் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் வேகவைத்து, வெட்டிய உருளைக்கிழங்கு
- ¼ கப் ஊறவைத்த பட்டாணி
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 இன்ச் பட்டை
- 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- பாதி தக்காளி
- சிறிதளவு கறிவேப்பிலை
- 2 கீறிய பச்சை மிளகாய்
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
அரைக்க:
- ¼ கப் தேங்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 10 முந்திரிப் பருப்புகள்
- 1 பச்சை மிளகாய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, முந்திரி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலையைச் சேர்க்கவும். இதனுடன் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை, 2 கிராம்பு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நீளமாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். சில நொடிகள் வதக்கிய பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- இப்போது இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் ஊற வைத்து வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கிளறவும்.
- பட்டாணி குழையும் அளவிற்கு வந்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்க்கவும். இப்போது 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை மூடி வைத்து 3 நிமிடங்கள் சமைக்கவும்.
- மசாலா உருளைக்கிழங்குடன் நன்றாக கலந்த பிறகு கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பால் கூட்டு ரெடி!
உருளைக்கிழங்கால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமுள்ளதால் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும், இதில் அழற்சியைக் குறைக்கும் ஆந்தோசயனின்கள் எனப்படும் நன்மை பயக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
செரிமானத்தை ஊக்குவிக்கும்
உருளைக்கிழங்குத் தோல்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கலைத் தடுத்து, குடல் இயக்கத்தை சீராக வைக்கிறது. சமைத்து ஆறவைத்த உருளைக்கிழங்கில் "எதிர்ப்பு ஸ்டார்ச்" உருவாகிறது, இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ஒரு ப்ரீபயாட்டிக்காக செயல்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
உருளைக்கிழங்கில் ஆச்சரியப்படும் வகையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications
