Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உருளைக்கிழங்கும், அப்பளமும் இருந்தா.. மதியம் இப்படி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு செமயா இருக்கும்...
Urulaikilangu Appala Kootu Recipe In Tamil: மதியம் சிம்பிளா சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? வீட்டில் உருளைக்கிழங்கும், அப்பளமும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் செய்யுங்கள்.
இந்த கூட்டு சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கூட்டு செய்வதற்கு எளிமையாகவும் இருகுக்கும். இதை ஒருமுறை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு அப்பள கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு அப்பள கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்படுள்ளது. அதை படித்துசெய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பொரித்த அப்பளம் - 7-8
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2
* கடுகு - 1/2
* சீரகம் - 1/4
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் அதில்
நீரை ஊற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த கடலைப்பருப்பை நீருடன் அப்படியே ஊற்ற
வேண்டும்.
* பின் அதில் பாசிப்பருப்பை கழுவி சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெரிய துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு பற்களை சேர்க்க
வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம்,
கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள உருளைக்கிழங்கை
எடுத்து, அதன் தோலை நீக்கிவிட வேண்டும். பின்பு அதை கைகளான
துண்டுகளாக்கி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் சாம்பார் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதை சேர்த்து கிளறி விட்டு, 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள பருப்பு சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக பொரித்து வைத்துள்ள அப்பளத்தை பெரிய துண்டுகுளாக்கி
சேர்த்து கிளறினா, சுவையான உருளைக்கிழங்கு அப்பள கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications