Latest Updates
-
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவின் டாப் 10 பழமையான நகரங்கள் என்னென்ன தெரியுமா? இதில் 2 நகரங்கள் தமிழ்நாட்டில் இருக்காம் -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்.. -
உலக வரைபடத்திலேயே இல்லாத 7 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளுக்கு தனி இராணுவம், கரன்சி கூட இருக்காம் -
கருப்பு உளுந்து இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட...
உளுத்தம் பருப்பையும், வெங்காயத்தையும் வெச்சு ஒருடைம் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு நல்லா இருக்கும்..
Urad Dal Onion Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? இன்னும் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? இன்னும் யோசனை செய்து கொண்டு தான் இருக்கிறீர்களா? சட்னி செய்யலாம் என்றால் தக்காளி இல்லையா?
அப்படியானால் தக்காளி இல்லாமல் வெறும் உளுத்தம் பருப்பையும், வெங்காயத்தையும் வெச்சு ஒரு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி அட்டகாசமாக இருக்கும் மேலும் இது உடலுக்கு சத்தானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுத்தம் பருப்பு வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3-4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சிறிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து கல் உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, துருவிய தேங்காயை
சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பொடியாக
நறுக்கிய சிறிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
உளுத்தம்பருப்பு வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
