Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும்
Udupi Style Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி சசெய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பல பெண்களுக்கு தலைவலியே வந்துவிடுகிறது. எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட உடுப்பி ஸ்டைல் தேங்காய் கொத்தமல்லி சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு பச்சை நிற தேங்காய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த ஸ்டைல் தேங்காய் சட்னி உடுப்பி மற்றும் கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி மிகவும் சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.
உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் தேங்காய் கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஸ்டைல் தேங்காய் கொத்தமல்லி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 10 புதினா இலைகள்
- ஒரு சிறிய துண்டு புளி
- 5 பல் பூண்டு
- 5 பச்சை மிளகாய்
- ஒரு சிறிய துண்டு இஞ்சி
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய், புதினா, புளி, பூண்டு, துருவிய இஞ்சி, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- இதில் சிறிதளவு நீரை சேர்த்து, கொரகொரப்பான சட்னியாக அரைத்துக்கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாயை உடைத்து சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றி நன்றாக கிளறவும். அவ்வளவுதான் சூப்பரான உடுப்பி ஸ்டைல் தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications
