Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
காலையில் இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த சட்னியை செய்யுங்க.. வித்தியாசமான சுவையில் டக்கரா இருக்கும்...
Tumkur Chutney Recipe In Tamil: இதுவரை இட்லி, தோசைக்கு எத்தனையோ எத்தனைகளை செய்திருப்பீர்கள். ஆனால் கர்நாடகா ஸ்பெஷல் தும்கூர் சட்னியை செஞ்சிருக்கீங்களா? இல்லைன்னா, இன்னைக்கு அந்த சட்னியை செய்யுங்க. இந்த சட்னிக்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. அவற்றை வதக்கி அரைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த சட்னியை சூடான இட்லியுடன் சாப்பிடும் போது, கணக்கில்லாமல் இட்லியை சாப்பிடுவீர்கள். மேலும் இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு தும்கூர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தும்கூர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* சின்ன வெங்காயம் - 5-6
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 2
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இஞ்சி, பூண்டு, சின்ன
வெங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் புதினா, கொத்தமல்லியைத் தூவி, சுருங்கும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், துருவிய தேங்காய் சேர்த்து 1 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தும்கூர் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
