Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
திருச்சி ஸ்டைல் சாம்பார் எப்படி செய்வதென்று தெரியுமா?
மதியம் சாதத்திற்கு எந்த சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படி திருச்சி ஸ்டைல் சாம்பார் செய்யுங்கள்.
மதியம் சாதத்திற்கு எந்த சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படி திருச்சி ஸ்டைல் சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் நாம் வழக்கமாக செய்யும் சாம்பாரை விட சற்று வித்தியாசமானது. என்ன வித்தியாசம் என்றால் இந்த சாம்பாரில் தேங்காய் அரைத்து ஊற்றி செய்ய வேண்டும். இந்த தேங்காய் சாம்பார் சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்களும் செய்யும் வகையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு திருச்சி ஸ்டைல் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்சி ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிறிய கேரட் - 1
* கத்திரிக்காய் - 2
* முருங்கைக்காய் -1
* உருளைக்கிழங்கு - 1
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கப்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - சிறிது
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், சீரகம் சேர்த்து நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, லேசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய துவரம் பருப்பை போட்டு, 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் காய்கறிகள், அரைத்த தேங்காய் விழுது, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி அடுப்பில் வைத்து ஒருகொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












