தக்காளி சாதத்தை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் இது பிரியாணியா-ன்னு கேப்பாங்க...

Posted By:

Thakkali Sadam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரிடம் தக்காளி சாதம் செய்யவா-ன்னு கேட்டா எல்லாரும் வேண்டாம்-ன்னு சொல்லுவாங்களா? அப்படியானால் நீங்கள் சரியான பக்குவத்தில் தக்காளி சாதத்தை செய்வதில்லை என்று அர்த்தம். நீங்கள் எப்படி செய்தாலும் தக்காளி சாதம் மட்டும் சுவையாக வரமாட்டீங்குதா?

அப்படியானால் அடுத்தமுறை தக்காளி சாதத்தை பாசுமதி அரிசி கொண்டு இந்த பக்குவத்தில் செய்யுங்க, டேஸ்ட் வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இப்படி தக்காளி சாதத்தை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் பிரியாணியா என்று கேட்பார்கள். ஏனெனில் அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Tomato Rice How To Make a Thakkali Sadam Recipe

உங்களுக்கு தக்காளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசுமதி அரிசி - 2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* தக்காளி - 5 (அரைத்தது)
* பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 4 கப்

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, நீர் வற்றும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 4 கப் நீரை ஊற்றி கிளறி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 25, 2025, 20:37 [IST]
Desktop Bottom Promotion