Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தக்காளி வெச்சு இந்த பக்குவத்துல ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க...
Thakkali Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியரா? தினமும் தவறாமல் ரசத்தை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசத்தை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை தக்காளி ரசத்தை செய்யுங்கள். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் தக்காளி ரசத்தை செய்யுங்கள்.
இப்படி தக்காளி ரசம் செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். அதோடு இனிமேல் ரசம் என்றால், தக்காளி ரசத்தை செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். உங்களுக்கு நீண்ட நேரம் சமையலறையில் இருக்க விரும்பாத நேரத்தில், தக்காளி ரசத்தை செய்யுங்கள், வேறு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது.

உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 3/4 டம்ளர் + தேவையான அளவு
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 3
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* மல்லி - 1 ஸ்பூன்
* மிளகு - 1 ஸ்பூன்
* சீரகம் - 1 ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பூண்டு - 8 பல்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சிறிது
புளி மற்றும் உப்பை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் கைகளால்
நன்கு பிசைந்து, சக்கையை எடுத்துவிட வேண்டும்.
* பின்பு அதில் 3 தக்காளியை சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் மல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு
பற்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கரைத்து வைத்துள்ள தக்காளியுடன் சேர்த்து, அதோடு
சிறிது கொத்தமல்லியையும் சேர்த்து கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து, நுரை கட்ட வரும் வரை
சூடேற்றி, ரசம் நுரைக்கத் தொடங்கியதும், அதில் பெருங்காயத் தூள்
மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
தக்காளி ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











