Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1/2 கப் பொட்டுக்கடலையும், 1 தக்காளியும் இருந்தா.. இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Tomato Pottukadalai Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலையும், தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் சட்னியை செய்யுங்கள்.
உங்களுக்கு தக்காளி பொட்டுக்கடலை சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்படித்து செய்து சுவைதது எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், 5 பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் 5 பல் பூண்டு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் பொட்டுக்கடலை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி
குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து
சிறிது நேரம் வதக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
பொட்டுக்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
