Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
Tomato Pepper Chutney Recipe in Tamil: காலை அல்லது மாலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி அல்லது தோசை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதற்கு சைடிஷ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இட்லி, தோசைக்கு பொதுவாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான் சரியான சைடிஷாக இருக்கும்.

தக்காளி சட்னியை நூற்றுக்கும் மேற்பட்ட வழிகளில் அரைக்கலாம். தக்காளியுடன் வெவ்வேறான பொருட்களை சேர்த்து அரைக்கும் போது அதன் சுவை மாறுபடும். மேலும் சில ஆரோக்கியமான பொருட்களை அதனுடன் சேர்த்து அரைக்கும் போது அது சுவையானதாக இருப்பதுடன், ஆரோக்கியமானதாகவும் மாறும். அப்படி தக்காளி சட்னி அரைக்கும் போது சேர்க்கக் கூடிய ஒரு ஆரோக்கியமான பொருள்தான் மிளகு.
உங்களுக்கு தக்காளி ,மிளகு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி மிளகு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 தக்காளி
- 4 வர மிளகாய்
- 5 பூண்டுப் பல்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் மிளகு
- 3 ஸ்பூன் எண்ணெய்
- சிறிய துண்டு புளி
- 2 ஸ்பூன் தேங்காய்
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- சிறிது கறிவேப்பிலை
- 2 சிறிய வெங்காயம்
செய்முறை:
- ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டுப் பல் மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இவற்றை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
- இதனுடன் உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இதை வெளியே எடுத்து ஆறவிடவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி, 2 ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
- இதை மென்மையான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதை சட்னி மீது ஊற்றி நன்றாக கிளறினால் சுவையான தக்காளி மிளகு சட்னி ரெடி.
- இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி என அனைத்திற்கும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications