Latest Updates
-
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
4 தக்காளி, 2 வெங்காயம் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. குழப்பி அடிப்பாங்க..
Tomato Kuzhambu Recipe In Tamil: இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் எப்போதும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? சற்று வாய்க்கு ருசியாக, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், வெங்காயமும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு தக்காளி குழம்பு செய்யுங்கள். இந்த தக்காளி குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். அதுவும் இந்த குழம்பை செய்தால், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடாமல், குழப்பி அடிப்பார்கள்.

உங்களுக்கு தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - 1 இன்ச்
பொடிப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த பச்சை மிளகாய் விழுது
* தக்காளி - 4 (பொடியாந ன)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து
நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஈரப்பதமில்லாத ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பை சேர்த்து
நன்கு மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பொட்டுக்கடலை பொடியுடன் நீரை சேர்த்து கட்டிகளின்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை தூவி, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதை சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கரைத்து வைத்துள்ள
பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்து மூடி வைத்து மீண்டும் 5 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications