Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மணமணக்கும்... தக்காளி குழம்பு
மதியம் சாதத்திற்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? தக்காளி மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் தேங்காயை அரைத்துவிட்டு தக்காளி குழம்பு செய்யுங்கள்.
மதியம் சாதத்திற்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? தக்காளி மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் சிம்பிளாக தேங்காயை அரைத்துவிட்டு தக்காளி குழம்பு செய்யுங்கள். இந்த தக்காளி குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு தக்காளி குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி குழம்பு எப்படி ஈஸியாக செய்வதென்று தெரியவில்லையா? கீழே தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 3 பல்
* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 3
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1-2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, சீரகத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தக்காளி குழம்பு தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
