Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்து அரைங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி. காலைப்பொழுதை மகிழ்ச்சியாகத் தொடங்க இதுவே சிறந்த வழி.
தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து செய்யும் போதுதான் முழுமையான சுவை கிடைக்கும். ஆனால் தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் இரு குறிப்பிட்ட பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் ஸ்பெஷலான தக்காளி சட்னியை எப்படி அரைக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- நன்கு பழுத்த தக்காளி - 4
- பச்சை மிளகாய் - 5
- எள் - 1 ஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
- பெருங்காயம் 1 சிட்டிகை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கொத்தமல்லி விதை, சீரகம், இறுதியாக எள் சேர்த்து, அவை வெடிக்கும் வரை வறுக்கவும். இதை ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளியை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.
- தக்காளி முழுவதுமாக வதங்கி மென்மையான பேஸ்டாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் எள் பொடி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மென்மையான சட்னியாக அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரியும் வரை தாளிக்கவும்.
- அதன்பின் உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- இந்த சட்னி மூன்று நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
- இட்லி, தோசைக்கு இந்த சட்னி அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications