Latest Updates
-
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்..
Thuvaram Paruppu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இந்த டிபனுக்கு ஒவ்வொரு நாளும் சைடு டிஷ் முடிவு செய்து பெரிய வேலையாக இருக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வேலையை எளிதாக்கும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபியைத் தான் பார்க்கப் போகிறோம். அது தான் துவரம் பருப்பு சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிடும் போது, சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த துவரம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் அல்லது 1/4 கப்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1 கப்
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், துவரம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை
ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான துவரம் பருப்பு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
