Just In
- 2 hrs ago
இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்... இந்த ராசிகளில் குறைவான மக்களே இருக்காங்களாம்... உங்க ராசி என்ன?
- 2 hrs ago
இந்த கோடையில் நீங்க உடற்பயிற்சி செய்யும்போது என்னென்ன செய்யணும் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?
- 4 hrs ago
மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?
- 5 hrs ago
உங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா? அப்ப 'இத' பண்ணுங்க...!
Don't Miss
- Sports
செம டென்சன்.. நொடிக்கு நொடி எகிறிய அழுத்தம்.. முக்கிய கட்டத்தில் அந்த தப்பை செய்த சாம்சன்.. பரபரப்பு
- Finance
லாக்டவுன் எதிரொலி: உஷாரான நிறுவனங்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு..!
- Movies
தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு
- Automobiles
50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனேசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா! 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!
- News
தமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தூதுவளை ரசம்
தூதுவளை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது சளி, இருமல், நெஞ்சு சளி, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனைகள் மற்றும் பல சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்தது. அதற்கு தூதுவளையின் இலையை துவையல், சூப் மற்றும் ரசம் என்று செய்து சாப்பிடலாம். அதிலும் தூதுவளை ரசத்தை சூப்பாக கூட சாப்பிடலாம். தூதுவளை ரசம் செய்வது மிகவும் எளிது. உங்களுக்கு தூதுவளை ரசம் எப்படி செய்வதென்று தெரியாதா?
கீழே தூதுவளை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்:
* தூதுவளை இலைகள் - 1 கையளவு
* நெய் - 1 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 1-2 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* சாம்பார் பவுடர் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தூதுவளை இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை ஒரு கப் சுடுநீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து, அதன் பின் வதக்கிய தூதுவளை இலைகளைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் புளிச்சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பவுடர், கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து, ஒருமுறை நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் புளியின் பச்சை வாசனை போய்விடும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, ரசத்தின் மேலே நுரை கட்ட ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இறுதியில் அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி விட வேண்டும்.
* இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்றினால், சுவையான மற்றும் சத்தான தூதுவளை ரசம் தயார்.
Image Courtesy: padhuskitchen