Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கணுமா? இந்த தூதுவளை ரசத்தை செஞ்சு சாப்பிடுங்க..
Thuthuvalai Rasam Recipe In Tamil: மழைக்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் யாரேனும் சளி, இருமலால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு கைப்பிடி தூதுவளை இலையைக் கொண்டு ரசம் செய்து கொடுங்கள்.
இந்த தூதுவளை ரசமானது சளி, இருமலில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த ரசம் நல்ல ருசியுடனும் இருக்கும். இந்த ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு தூதுவளை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தூதுவளை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - சிறுகோலி குண்டு அளவு
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
பொடி செய்வதற்கு...
* சீரகம் - 1 டீ1பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* தூதுவளை இலை - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் புளியை சேர்த்து
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை அரைத்து சேர்த்து, புளியைக் கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம்
பருப்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் தூதுவளை இலையை சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
கரைத்து வைத்துள்ளதை ஊற்றி, நுரைக்கட்ட தொடங்கும் போது அடுப்பை
அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லியை போட்டு, அதில் ரசத்தை
ஊற்றி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான தூதுவளை ரசம் தயார்.



Click it and Unblock the Notifications