Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வைரல் தேங்காய் பொடி ரெசிபி... தேங்காயும், வர மிளகாயும் இருந்தா இந்த பொடியை அரைங்க...தோசைக்கு செமையா இருக்கும்!
Thengai Podi Recipe in Tamil: சமீபத்தில் தேங்காய் பொடி என்பது மிகவும் வைரலானது. இட்லி, தோசைக்கு சில நிமிடங்களில் செய்துவிடக் கூடிய இந்த சைடிஷ் செய்வதற்கு மிகவும் எளிதானதாகவும், அதேசமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். சட்னி செய்ய நேரமில்லாத போது இந்த பொடியை அரைத்து வைத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சுவையான தேங்காய்ப்பொடி செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும். வறுத்து அரைக்கப்படும் இந்த பொடியை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். இதில் வறுத்து சேர்க்கப்படும் தேங்காய், பருப்பு வகைகள் மற்றும் வர மிளகாய் இதன் சுவையையும், வாசனையையும் அதிகரிக்கும்.

உங்களுக்கு சூப்பரான தேங்காய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் உலர்ந்த தேங்காய்
- ½ கப் முழு உளுத்தம் பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
- 10 வர மிளகாய்
- 6 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 1 டீஸ்பூன் புளி
- 1 டீஸ்பூன் பெருங்காயம்
- 6 பூண்டு பல்
- தேவையான அளவு உப்பு
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- முதலில் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ½ கப் முழு உளுத்தம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, 10 வர மிளகாய் மற்றும் 6 காஷ்மீரி மிளகாய்களைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும், இதை ஒரு தட்டிற்கு மாற்றி தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, 1 கப் தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து இதையும் தனியாக வைக்கவும்.
- பின் பூண்டு பற்களை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
- இப்போது 1 டீஸ்பூன் புளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும், பின்னர் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
- அனைத்தும் ஆறும் வரை காத்திருக்கவும்.
- அனைத்தும் ஆறியவுடன் அவற்றை ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- இதை ஒரு தட்டுக்கு மாற்றி ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத பாத்திரத்துக்கு மாற்றவும்.
- இதை சூடான தோசையுடன் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications