Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
தினமும் சாம்பார், குழம்பு-ன்னு செய்யாம.. ஒரு டைம் இந்த ரைஸ் செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்...
Thengai Paal Brinji Rice Recipe In Tamil: தினமும் மதியம் சாதத்துக்கு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரத்துவிட்டதா? உங்களால் சமையலறையில் நீண்ட நேரம் இருக்க விருப்பமில்லையா? அப்படியானால் ஒருமுறை தேங்காய் பால் பிரிஞ்சி சாதத்தை செய்யுங்கள். இந்த பிரிஞ்சி சாதம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெற்றுத் தரும். அந்த அளவில் இதன் சுவை பிரியாணியை மிஞ்சும் அளவில் இருக்கும்.
உங்களுக்கு தேங்காய் பால் பிரிஞ்சி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் பிரிஞ்சி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பட்டை - 3
* அன்னாசிப்பூ - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புதினா, மல்லி - 1 கைப்பிடி
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* மீல் மேக்கர் - 50 கிராம் (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து,
குளிர்ந்த நீரில் கழுவியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1 1/2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசுமதி அரிசி - 1 டம்ளர் (10 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* பிரட் - 3 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு, 10 நிமிடம் நீரில்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு,
அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, மல்லி சேர்த்து வதக்கி, அதைத் தொடர்ந்து
நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் மீல் மேக்கரை சேர்த்து
நன்கு 5 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து நன்கு
3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி கொதிக்க விட வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து
கிளறி கொதிக்க விட வேண்டும்.
* அதில் கொதி வந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை பிழித்து, குக்கரை
மூடி, உயர் தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் பிரட் துண்டுகளை எடுத்து, அதை சிறு சிறு சதுரத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்
துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* குக்கரில் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் பொரித்த பிரட்
துண்டுகளை வைத்து, கரண்டியால் அப்படியே கிளறி விடாமல், கரண்டியின்
பின்புறத்தைக் கொண்டு லேசாக கிளறிவிட்டால், சுவையான தேங்காய் பால்
பிரிஞ்சி சாதம் தயார்.
Image Courtesy: Raks Kitchen



Click it and Unblock the Notifications
