Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சூப்பரான தேங்காய் அல்வா ரெசிபி... செஞ்சு பாருங்க... திருநெல்வேலி அல்வாவை விட செமையா இருக்கும்...!
Coconut Halwa Recipe in Tamil: இனிப்புகள் என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். அனைவராலும் ஒதுக்க முடியாத ஒரு பிரபல இனிப்பு என்றால் அது அல்வாதான். அல்வா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான். ஆனால் அல்வாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. கோதுமை அல்வா முதல் பாம்பே அல்வா வரை பல பிரபல அல்வாக்கள் உள்ளன.
சுவையான மற்றும் பிரபலமான அல்வா வகைகளில் ஒன்று தான் தேங்காய் அல்வா. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வித்தியாசமான இனிப்பு பலகாரம் செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு இந்த தேங்காய் அல்வா சரியான தேர்வாக இருக்கும். மேலும் தேங்காய் அல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும். இந்த சுவையான தேங்காய் அல்வாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பெரிய தேங்காய் - 1
- பச்சரிசி - 1 கப்
- நெய் - தேவையான அளவு
-. முந்திரிப் பருப்பு - 20
- தூளாக்கப்பட்ட வெல்லம் - 1 கப்
- ஏலக்காய் - 4
செய்முறை:
- தேங்காயை உடைத்து உதிரியாக துருவி வைத்துக் கொள்ளுங்கள், தேங்காயின் துவர்ப்பு பகுதி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- ஏலக்காயை தோல் நீக்கி வைக்கவும் அல்லது பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .
- பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
- பிறகு துருவிய தேங்காயையும், அரிசியையும் மிக்சியில் அரைத்து நன்றாக வெண்ணை போல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் நீங்கள் மிக்சியில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து உடன் வெல்லத் தூளையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறி விடவும்..
- இந்த கலவை அனைத்தும் சுருள வரும் வரையில் பொறுமையாக நன்றாகக் கிளறவும் (அடிப்பிடிக்கவோ, பாத்திரத்தின் பக்கங்களிலோ ஒட்டக் கூடாது).
- இப்போது நன்கு சுருள வந்தவுடன் நெய்யை ஊற்றி, வறுத்த முந்திரியையும் போட்டு நன்றாக கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
- சுவையான தேங்காய் அல்வா ரெடி!



Click it and Unblock the Notifications