Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஈவ்னிங் நேரத்துல தேங்காய் வெச்சு இந்த மாதிரி பாயாசம் செய்யுங்க.. உடனே காலியாகும்...
Coconut Milk Payasam Recipe In Tamil: ஆடி மாதம் தொடங்கிவிட்டது. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்வதோடு, கூழ் அல்லது ஏதாவது சமைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
உங்கள் வீட்டில் ஆடி மாதத்தில் அடிக்கடி வடை, பாயாசத்துடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், ஒருமுறை தேங்காய் பால் பாயாசத்தை செய்யுங்கள். இந்த தேங்காய் பாயாசத்தை மாலை வேளையில் கூட காபி, டீ-க்கு பதிலாக செய்து குடிக்கலாம். இந்த பாயாசம் அவ்வளவு சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 3
* தண்ணீர் - 2 1/4 கப்
* வெல்லம் - 3/4 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின்
அதில் சிறிது நீரை ஊற்றி அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்ததும், மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியை நீருடன்
சேர்த்து, அதில் 1 கப் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து,
1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் அரைத்த தேங்காயை ஊற்றி, அதில் 2 கப் நீரை
ஊற்றி மிதமான தீயில் வைத்து, 3-5 நிமிடம் கைவிடாமல் கிளறி விட
வேண்டும்.
* தேங்காய் சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் வெல்லத்தை
சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி
பாயாசத்தை இறக்கினால், சுவையான தேங்காய் பால் பாயாசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications